Wednesday, 21 February 2018

மாற்றுத்திறனாளிகள் விவகாரம் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கால அவகாசம்

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீதம் மானிய வழங்க வேண்டும என்ற கோரிக்கை தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு 8 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டம் தொடர்பான அறிவிப்பாணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வேலைக்கும் செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் சமூக நலத்திட்டங்களில் சாதாரண மக்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் இருந்து கூடுதலாக 25 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி இவர்கள் தற்போது நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tamilnadu Government